டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர் வீழ்ச்சி! வெளியான தரவுகள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் இருந்து தெரிய வருகின்றது.
கடந்த வியாழக்கிழமை (29) வரையான இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதம் தொடர்பான புள்ளிவிபரங்களில் இருந்தே இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் மாற்றங்கள்
கடந்த வியாழக்கிழமை (29) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337.13 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை(28) 327.99 ரூபாயாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை, வியாழக்கிழமை (29) 328.02 ரூபாயாகச் சிறிதளவு உயர்ந்துள்ளது.

அதேவேளை, டொலரின் விற்பனை விலை 337.00 ரூபாயிலிருந்து 337.13 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அத்துடன் வளைகுடா நாணயங்கள் உட்பட மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறியளவிலான மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
இலட்சக்கணக்கானோருக்கு திடீரென இடைநிறுத்தப்பட்ட அஸ்வெசும பணம்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான விளக்கம்