மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் முறைகேடு - களமிறங்கிய புலனாய்வாளர்கள்
இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை விசாரிப்பதற்காக, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு உள்ளிட்ட புலனாய்வாளர்கள் குழுவொன்று விசாரணையை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, திணைக்களத்தின் கணினி அமைப்பிலிருந்து முழுமையான தரவுகளை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரணை
திணைக்களத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் குறித்து ஒரு விரிவான விசாரணையை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பீடப் பேராசிரியர்கள், இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழுவின் (CERT) அதிகாரிகள், மற்றும் இலங்கை அரசுத் தொழில்நுட்பம் (Govtech Sri Lanka) மற்றும் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்கின்றுள்ளனர்.
இலட்சக்கணக்கானோருக்கு திடீரென இடைநிறுத்தப்பட்ட அஸ்வெசும பணம்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான விளக்கம்
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri