ஜனாதிபதி பொதுமன்னிப்பு முறைமையை நீக்குவது குறித்து அரசின் முக்கிய நகர்வு
கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் நடைமுறையை திருத்தியமைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர தினம், வெசாக் பௌர்ணமி, பொசோன் பௌர்ணமி, நத்தார் பண்டிகை போன்ற விசேட நாட்களில் சிறைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும் பொதுமன்னிப்பு வழங்குதல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் தண்டனையை மாத்திரம் இரத்துச் செய்யும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குதல் என இரண்டு வகைகளில் ஜனாதிபதி பதவியில் இருப்பவரின் அதிகாரத்தைக் கொண்டு சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது.
மேலதிக நடவடிக்கை
எனினும் தனிப்பட்ட நபர்களின் தண்டனையை இரத்துச் செய்து வழங்கப்படும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், அதனை ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே கருதப்பட வேண்டியிருப்பதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனடிப்படையில் தமக்கு வேண்டியவர்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தும் நடைமுறையை நீக்கவேண்டும் என்ற கருத்து ஆளுங்கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சட்டத்துறை நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றதன் பின்னரே இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam