ஜனாதிபதி அநுர கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது..! பிரதமர் உடன் நேரடியாக விவாதிக்க நாம் தயார்..
ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றி வரும் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் அகிலன் மற்றும் அதன் இணைப்பாளர் முகமட் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
ஹரிணியால் பொற்பேற்க முடியுமா..
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் செய்வதற்கான காரணம், ஜனாதிபதியின் செயலாளர்கள் நாங்கள் கூறும் விடயங்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்பதுதான். அதனால்தான் அந்தப் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக மாறிவிட்டது.
அதேபோன்று, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். அப்படியொரு கருத்தைப் பிரதமர் கூறுவது சரியல்ல. நாங்கள் ஹரிணியுடன் ஒரே மேசையில் அமர்ந்து எங்களுடைய வாதங்களை எடுத்துரைக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால், எங்களுடைய பிரச்சினைகளைக் கேட்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
இதுவரையில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பல நியமனங்கள் இருந்தபோதிலும், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் காணலாம். இவற்றுக்கு பிரதமரால் பொறுப்பேற்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.