தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையில் பிளாஸ்டிக் அட்டைகளின் தட்டுப்பாடு காரணமாக தேசிய அடையாள அட்டைகள் அச்சிடும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சுமார் 10 இலட்சம் விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் காத்திருப்பதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறுகிறது.
அடையாள அட்டை முறை
பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய காகித அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, தயாரிப்புச் செலவைக் குறைக்கும் நோக்கோடும் 12 இலக்க பிரத்யேக எண்ணுடனும் கூடிய பிளாஸ்டிக் அடையாள அட்டை முறை கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும், தற்போதைய பிளாஸ்டிக் அட்டை தட்டுப்பாடு காரணமாக அடையாள அட்டை விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும், பல்வேறு அரச மற்றும் தனியார் துறைச் சேவைகளைப் பெறுவதற்கும் தேசிய அடையாள அட்டை அத்தியாவசியமானது என்பதால், இந்த நிலைமை பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri