சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல்
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான தகுதிகாண் நடவடிக்கைகளில் சித்தியடைந்தவர்கள், தங்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான பிளாஸ்டிக் அட்டைகள் மற்றும் இயந்திரங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள்
அதன் காரணமாக தற்போதைக்கு இலங்கையில் 65 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதே நேரம் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதில் ஏற்பட்டுள்ள சிக்கலையடுத்து தற்காலிக தீர்வாக விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri