ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய 3 எண்ணெய்க் கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவை வெடித்துச் சிதறியுள்ளன.
இந்தக் கப்பல்கள் தங்களது ராடார் மற்றும் வழிகாட்டல் அமைப்புகளை முடக்கிவிட்டு, அனுமதி பெறாத தெற்கு கடல் பாதை வழியாக வெளியேற முயன்றதாக, ஈரானிய புரட்சிகர விடுதலை படை தெரிவித்துள்ளது.
கடுமையான நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் தங்களால் விதிக்கப்பட்ட பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும், கடல்சார் விதிமுறைகளையும் மீறிச் செல்லும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவிற்குச் சொந்தமான உளவு வேலைகளில் ஈடுபடும் ஆளில்லா விமானத்தை சேதமின்றி கைப்பற்றியுள்ளதாக, ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது தமது மின்னணு போர் முறைமை மூலம் இந்த ஆளில்லா விமானத்தின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசப்படுத்தி அதைத் தரையிறக்கியுள்ளதாக, ஈரானிய கடற்படை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ட்ரோனில் இருந்த தரவுகளை ஆய்வு செய்ததில், அது பாரசீக வளைகுடாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து இயக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
YOU MAY LIKE THIS
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam