இலங்கையில் இதுவரையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு
பதிவாகியுள்ள 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட 867 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அவற்றில் T-56 ரக துப்பாக்கிகள் 14, கைத்துப்பாக்கிகள் 31, ரிவோல்வர்கள் 25 உள்ளிட்ட ஏனைய ஆயுதங்களும் அடங்குவதாக அவர் கூறினார்.
அதேவேளை, 2025ஆம் ஆண்டு முழுவதும் 2,404 ஆயுதங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.