வாகன வருமான வரி உரிமம் பெற நாளை முதல் TIN சான்றிதழ் கட்டாயம்
இலங்கை முழுவதும் இன்று (11.01.2026) முதல் வாகன வருமான வரி உரிமத்தைப் (Revenue Licence) புதிதாகப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இதற்கான புதிய வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை (CR) சமர்ப்பிப்பவர்கள் TIN சான்றிதழையும் வழங்க வேண்டும்.
TIN சான்றிதழ்
வாகன உரிமை மாற்றத்தின்போது MTA 11 மற்றும் CMT 52 படிவங்களுடன், CMT 52 இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவரின் TIN சான்றிதழ் அவசியம். அச்சுப் பிரதிகள் மற்றும் மின்னணு பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதேவேளை, இந்த TIN நடைமுறையில் இருந்து 18 வயதுக்குக் குறைந்தவர்கள், 183 நாட்களுக்கும் குறைவாக இலங்கையில் தங்கியுள்ள தகுதியான வெளிநாட்டவர்கள், TIN பதிவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், இராஜதந்திர சலுகை பெற்றவர்கள், தனிநபர்கள் அல்லாத நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வாகனப் பதிவு, வங்கிச் சேவைகள், காணிப் பதிவு மற்றும் வணிகப் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.