ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்! எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்
பனாமா கொடியுடன் பயணித்த MT LOUISE 1 எண்ணெய் கப்பல், வெள்ளிக்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் காந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது.
சம்பவத்தின் போது, கப்பலில் 27 இந்திய மாலுமிகள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் கப்பலின் அடிப்பகுதியில் இரண்டு காந்த வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
இதனால், கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டதுடன், கப்பலின் இயக்கமும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது மாலுமிகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காயங்களோ சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை. ஓமான் நாட்டின் கசாப் பகுதியில் இருந்து வடகிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 2026, ஒக்டோபர் 29ஆம் திகதி MT ARZANAH என்ற மற்றொரு எண்ணெய்க் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானது.
அதிலிருந்த இரண்டு இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஹோர்முஸ்ஸில் தொடரும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.
பௌத்த பிக்குவாக வேடமிட்டு நடைபயணம்! சில மணி நேரங்களிலேயே அம்பலமான மொட்டுக் கட்சி அரசியல்வாதியின் அடையாளம்