நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டண மாற்றம் நிகழ்ந்தாலும் அது பெரிய அளவிலான உயர்வை கொண்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் பொதுவாக நீர் கட்டணத்தைச் சீரமைப்பது அல்லது மறுபரிசீலனை செய்வது ஆண்டிற்கு 2 முறை மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையாகும்.
நீர் கட்டணத்தைக் கணக்கிடுவதற்கு அறிவியல் பூர்வமான முறைமை தயார் செய்யப்பட்டுள்ளது.
கட்டண மறுசீரமைப்பு
அதற்கமைய, ஆண்டிற்கு இருமுறை கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். அடுத்த மறுபரிசீலனை 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடைபெறவுள்ளது.

நீர் சுத்திகரிப்புக்கான செலவு அதிகரித்துள்ளதா.. அந்த செலவின் அடிப்படையில் கட்டணத்தைச் சீரமைக்க வேண்டுமா.. இல்லையா என்பது வரும் ஜனவரி மாதமே தீர்மானிக்கப்படும்.
ஜனவரி மாதம் வரை நீர் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஜனவரி மாதத்திலும் தற்போதைய கட்டணத்திலேயே சேவையை தொடர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
பெரிய அளவிலான சீரமைப்பு இருக்காது என எதிர்பார்க்கிறோம். எனினும், ஜனவரி மாத நிலைமைகளுக்கு ஏற்பவே அந்த மறுபரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சில வர்த்தக ஒப்பந்தங்களை திருத்த முடியுமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
நுகர்வோருக்கு நிவாரணம்
சில ஒப்பந்தங்கள் மற்றும் சந்தையைக் கைப்பற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் காரணமாக, சிலவற்றை மாற்றியமைக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. இதனால் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் வருமானம் குறைந்த மற்றும் கட்டணத்தைச் சுமக்க முடியாத நுகர்வோர் குழுவினருக்கு நிவாரணம் வழங்குவதாகும். எரிபொருள் விலை உயரும் போது, அதனைத் தாங்கக்கூடிய விலையில் பெறுவதற்கு நாங்கள் மானியம் வழங்குகிறோம்.
அதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதாலும் மக்களுக்குப் பல்வேறு மட்டங்களில் மானியங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போதைக்கு இந்நிலைமையை இவ்வாறே நிர்வகிக்க வேண்டியுள்ளது.
எனினும், நீண்டகால அடிப்படையில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாதகமாக உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் சந்தையைக் கைப்பற்ற அனுமதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
அதனூடாகவே இதற்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குவாக வேடமிட்டு நடைபயணம்! சில மணி நேரங்களிலேயே அம்பலமான மொட்டுக் கட்சி அரசியல்வாதியின் அடையாளம்