6.3 பில்லியன் டொலர் கிரிப்டோ நிதி திருட்டு! வெளியாகியுள்ள பல திடுக்கிடும் தகவல்கள்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பைனான்ஸ் மீது, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த அன்று, சுமாராக 6.3 பில்லியன் டொலர் (சுமார் 4.7 பில்லியன் பவுண்ட்ஸ்) மதிப்பிலான கிரிப்டோ நிதி திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய ஊடுருவலில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் Secret Service, சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து திருடப்பட்ட நிதியைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
6.3 பில்லியன் டொலர் மாயம்
இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்குப் பின்னால் வடகொரிய ஹேக்கர்கள் இருக்கலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். Blockchain ஆய்வு நிறுவனமான TRM Labs, இந்தத் தாக்குதலின் சில அம்சங்கள் ஏற்கனவே வடகொரியாவுடன் தொடர்புபடுத்தப்பட்ட சைபர் தாக்குதல்களை ஒத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பைனான்ஸ் நிறுவனம், திருடப்பட்ட நிதியில் ஒரு பகுதியை மீட்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது வடகொரியா கிரிப்டோகரன்சி திருட்டுகளைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதாகவும், அந்தப் பணம் அந்த நாட்டின் ஆயுதத் திட்டங்களுக்கு உதவுவதாகவும் பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.