சூனியத்தை தொடர்ந்து புதிய வேடமெடுக்கும் பிக்குகள்.. உருவாக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த பாம்பு கோல்
சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் குற்றவாளி கலகொட அத்தே ஞானசார தேரருக்காக சில பிக்குகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைள் கடும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகி வருகின்றன.
அண்மையில், ஞானசார தேரருக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, தேரர் ஒருவரால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு சூனியம் வைக்கப்பட்டது.
இவ்விடயம் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பௌத்த மத போதகர்களுக்கு மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இருப்பினும், காலப்போக்கில் இவ்விடயம் விமர்சனத்திற்கும் தற்போதைய தலைமுறையினர் மத்தியில் கேலிக்கு உள்ளானது.
இதற்கிடையில், நேற்று ஆரம்பிக்கப்பட்ட மற்றுமொரு போராட்டத்தில் பிக்கு ஒருவர் பாம்பு கோல் என்ற ஒன்றை கையில் ஏந்தியவாறு ஈடுபட்டுள்ளார்.
பெரும் பேசுபொருளாகியுள்ள இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,