வெளிநாடொன்றில் இலங்கை விமான பணிப்பெண்ணின் மோசமான செயலால் சர்ச்சை
ஜப்பானில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெண் விமானப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Aeon சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் திருடிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானிய குற்றவியல் சட்டத்தின் கீழ், விசாரணை முடியும் வரை சந்தேகநபர் ஒருவரை அதிகபட்சமாக 21 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்தும் அதிகாரம் ஜப்பான் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பெண் கைது
அதற்கமைய, குறித்த பணிப்பெண் தற்போது அந்நாட்டின் சட்டப்பூர்வ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் குற்றப் புலனாய்வு அமைப்பானது வெளிநபர்களின் தொடர்புகள் மூலம் சட்டத்தில் விட்டுக்கொடுப்பினை மேற்கொள்ள எவ்வித இடமும் அளிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறிய திருட்டாக இருந்தாலும் வழக்கு விசாரணைக்கு முன்னரான காலத்தில் சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிப்பதை ஜப்பானிய பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் ஜப்பானிய அதிகாரிகளுடன் நேரடியாக கலந்துரையாடி சந்தேக நபரான பெண்ணை விடுவிக்கக் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
உள்ளூர் அரசியல் அல்லது நிறுவன ரீதியிலான செல்வாக்கைக் கொண்டு ஜப்பானிய பொலிஸ் நடைமுறையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என இராஜதந்திர வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
சுயாதீன விசாரணை
இந்த மீட்பு நடவடிக்கைக்குப் பின்னால் விமான சேவைத் துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இருப்பதாகப் பணியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த காலத்தில் பெண் பணியாளர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்கள் இவ்வாறு தனிப்பட்ட தலையீடுகளை மேற்கொள்வது நிறுவனத்தின் ஒழுக்கச் சீர்கேட்டைக் காட்டுவதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேசிய விமான சேவையின் சர்வதேச நற்பெயருக்கு ஏற்படும் பாங்கான பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இவ்வாறான தவறான செயல்கள் குறித்து உடனடியாகச் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகமோ அல்லது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளோ இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.