உக்ரைனுடனான போரில் படையினர் உயிரிழப்பு - முதல் முறையாக எண்ணிக்கையை வெளியிட்டுள்ள ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 7 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுவீசி வருவதாகவும், பல அகதிகள் அண்டை ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் உயிரிழந்த எண்ணிக்கையை முதல் முறையாக ரஷ்யா வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது 7வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் தரப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 1,597 வீரர்கள் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போரில் உக்ரைன் வீரர்கள் 2 ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவுடனான மோதலில் தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
உக்ரைன் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது?
7 ஆயிரம் ரஷ்ய படைகள் கொல்லப்பட்டனர்! - உயர் அதிகாரிகள் பலரை சிறைபிடித்தது உக்ரைன்
இந்தியர்களுக்கு ஆறு மணி நேரம் அவகாசம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஷ்யா

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
