ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது? (VIDEO)
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என அரசியல் பொருளாதார விமர்சகர் இதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது வெளிநாட்டு கையிருப்பு மூலமான ஏற்றுமதியினை கூட்டிக்கொள்வதற்காக நாணய கையிருப்பிலுள்ள 80 வீதத்தினை தங்களுக்கு விற்கும்படி ரஷ்யாவினுடைய மத்திய வங்கி கோரியிருந்தது.
இதற்கு இணங்க 1 மில்லியன் டொலரிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேப்போன்ற பிரச்சினை இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது.
அதாவது இலங்கையின் வர்த்தக வங்கிகளான கொமர்சல் வர்த்தக வங்கிகளிடம் காணப்படும் வெளிநாட்டு நாணயங்களை இலங்கை மத்திய வங்கி கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில்,மத்திய வங்கியின் ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதேப்போன்று நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் ரஷ்யாவின் பிரச்சினை அனைத்தும் இலங்கைக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. பிற்காலத்தில் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை போன்று இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,



