இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுக்கொடுக்க முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நாளை மறுதினம் சனிக்கிழமை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மாகாணசபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி... 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி... இன்று ஈழம்... மயான பூமி! சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்... நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான பா. வளர்மதி.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கொம்பனிவீதி சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே குதித்து அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். வடமராட்சி, சக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இருதரப்புகளுக்கிடையிலான மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யவுள்ளதாக நவ சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திரா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு ஆதரவு கோரி படையினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உலக வன உயிர் நிதியத்தின்(wwf) அறிக்கைப்படி இந்த உலகத்தின் இயற்கை ஆதாரங்களை பயன்படுத்துவதில் சுவிட்சர்லாந்து 24 ஆவது இடத்தில் உள்ளது. பூமியில் மாறி வரும் இயல்பையும் அதனால் மனிதக்குலத்தில் ஏற்படும் தாக்கத்தையும் உலக வன உயிர் நிதியம் ஆவணப்படுத்தியது.
இங்கிலாந்தில் வருமான பற்றாக்குறை காரணமாக பகுதி நேர வேலை செய்வோர் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ளது என்று வர்த்தக யூனியன்(டியுசி) ஆய்வு தெரிவிக்கிறது.
கனடாவில் வேலை வாய்ப்புகள் பெருகினாலும் பொருளாதாரம் விரைவில் முன்னேறும் என்ற உறுதியை சமீபத்திய வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிக்கை உறுதியாக தெரியப்படுத்தவில்லை என்று நிதியமைச்சர் ஜிம் ஃபிளாஹெர்ட்டி(Jim Flaherty) நேற்று தெரிவித்தார்.
ஜேர்மனியில் மறைந்து வாழும் ஈரான் நாட்டைச் சேர்ந்த ராப்” இசைக்கலைஞரான ஷாஹின் நாஜாஃபிக்கு(Shahin Najafi) ஈரானிய ஷியா முஸ்லிம்கள் நரகதண்டனை விதித்துள்ளனர்.
யாழ் குடாவைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியப் படையினர் அதிக இழப்புக்களைச் சந்தித்திருந்ததால், இந்திய அமைதிகாக்கும் படையினரின் இராணுவ நடவடிக்கைகளை முன்நின்று நெறிப்படுத்திக்கொண்டிருந்த லெப்.ஜெனரல் ஹரிகிரத் சிங் அவசர அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.