ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு
ஐரோப்பாவில் (Europe) வழிப்பறி சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி (Italy) முதலிடத்தில் வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல நாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடான இத்தாலி தற்போது ஐரோப்பாவின் வழிப்பறி தலைநகரமாக மாறியுள்ளது.
வழிப்பறி சம்பவங்கள்
இத்தாலியில் மக்கள் அதிகமாக திரளும் பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தெருக்களில் சர்வசாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இத்தாலி(Italy), இரண்டாமிடத்தில் பிரான்ஸ்(France), மூன்றாவது இடத்தில் ஸ்பெயின்(Spain), நான்காமிடத்தில் ஜேர்மனி(Germany) மற்றும் ஐந்தாமிடத்தில் நெதர்லாந்து(Netherlands) என முதல் ஐந்து இடங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகள் அமைந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |