கனடா வாழ் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்
கனடா வாழ் தமிழர்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ளதாக ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமிழ் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகம் மீது தனக்கு மரியாதை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான உழைப்பு
கடுமையான உழைப்பு திறனை கொண்டமையே இதற்கு காரணமாகும். வெறும் கையுடன் கனடாவுக்கு வந்த பல தமிழர்கள் இன்று பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

பல்வேறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு முன்னேறியுள்ளனர். உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் என உருவாக்கி தொழில் துறையினை தமிழர்கள் வளர்த்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் கல்வியை வழங்குகின்றனர். உங்கள் இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்கின்றீர்கள்.
இதன் காரணமாக தமிழ் சமூகத்தை எனக்கு மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        