ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்கள் முழுமையாக நடைபெற்ற நிலையில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
இதன் மூலம் 2025–27 ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன.
செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இதற்கிடையில், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 எனக் கைப்பற்றியது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என வென்ற தென்னாபிரிக்க அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அவுஸ்திரேலியா கீழிறங்கியுள்ளது.
இந்த நிலையில்,உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான அணிகளுக்கிடையிலான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.