இலங்கையில் வாகனம் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சி! விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2027ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் வரி திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாததால், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவிக்கையில்,
வாகன இறக்குமதிக்கு சலுகைகள்
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தில் வாகன இறக்குமதிக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என்று தனது சங்கம் எதிர்பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், வாகன இறக்குமதிக்கு எந்த சலுகையும் வழங்கப்படாததால், வாகன விலைகளில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு சலுகை வழங்கப்படாததற்கான காரணம் குறித்து தனது சங்கம் நிதி அமைச்சகத்திடம் விசாரித்ததாகவும் அரோஷா ரொத்ரிகோ விளக்கமளித்துள்ளார்.
டொலர் மதிப்பு மற்றும் மத்திய கிழக்கில் போர்ச்சூழல்
அதன்படி, வாகனங்கள் மீது தற்போது நடைமுறையில் உள்ள கூடுதல் கட்டணங்கள் மற்றும் வரிகள் மாற்றமின்றி தொடரும் என்பதால், வாகன விலைகளில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய டொலர் மதிப்பு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, இந்த சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஒரு பெரிய விஷயமல்ல என்று அவர்கள் கூறியுள்ளார்.
வாகனம் வாங்க விரும்பிய பலர், வாகனம் வாங்காமல் இந்த வரவு - செலவு திட்டத்திற்காக காத்திருந்ததாகவும், தற்போதைய நிலைமை வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.