செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரின் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய நபர்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரில் வெள்ளப்பெருக்கு தொடர்பான காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை குற்றம் சாட்டியுள்ளது.
அவ்வாறு உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் நேற்று நடைபெற்ற சபை அமர்வில் தெரிவித்தார்.
கடந்த 6 ஆம் திகதி கொழும்பு நகரில் பெய்த மழையுடன் நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கியமை தொடர்பாக நேற்று மாநகர சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
வெள்ளப்பெருக்கு
இதன்போது கருத்துத் தெரிவித்த மேயர் வ்ராய் கெலி பல்தசார், One Galle Face நீரில் மூழ்கியிருப்பது போன்ற காணொளியொன்றைத் தான் சமூக வலைத்தளங்களில் கண்டதாக கூறினார்.

குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
தான் குளமொன்றில் இறங்கி நீராடுவது போன்றும் அதில் சித்தரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காணொளிகளை உருவாக்கியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழையை தவறாக பயன்படுத்தி அரசியல் அலைகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.