சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்புவோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சுவிட்சர்லாந்தில் குடியேறுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய கட்டணங்களை விதிக்க சுவிஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் குடியமர வேண்டுமாயின் 4,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (CHF) கட்டணம் செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் குடும்பத்தினர் அவர்களுடன் இணைந்துகொள்ளும் பட்சத்தில், அவர்களிலுள்ள வயது வந்த ஒவ்வொரு நபருக்கும் தலா 2,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் விதிக்கும் முன்மொழிவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஏற்படும் சிக்கல்..
இந்தத் திட்டம், அடுத்தகட்டமாக எதிர்வரும் டிசெம்பர் மாதம், சுவிஸ் நாடாளுமன்றத்தின் மேலவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் புதிய திட்டம் சட்டமாக்கப்படுமானால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய புலம்பெயர்ந்தோரை அது கடுமையாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.
மேலும், இதற்குப் பதிலாகச் சுவிஸ் பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியேறும்போதும் இதேபோன்ற கட்டணங்களைச் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகலாம் எனவும் அரசியல் அவதானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.