தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி.. ஈரான் விவகாரத்தில் பின்வாங்கிய ட்ரம்ப்
ஈரானுடன் எவ்வித ஒப்பந்தமும் அமெரிக்காவிற்குத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுவரும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸிடம், ஜனநாயகக் கட்சியினரின் நிர்வாகத்திலுள்ள நகரங்கள் மற்றும் மாகாணங்களில் நிலவும் குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் விவகாரங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்துமாறு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்க மக்கள்..
ஈரானின் கடும்போக்குடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் நேருக்கு நேர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் பரிசீலித்து வருவதாக அண்மையில் செய்தி வெளியானது.

இந்தச் செய்தி வெளியான ஒரு நாளுக்குப் பின்னர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் சந்தித்த பின்னடைவிற்கு ஈரானுடனான அதிக செலவுமிக்க போரே காரணம் எனத் துணை ஜனாதிபதி வான்ஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் அவ்வாறு கருத்து வெளியிட்டு ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரான் விவகாரத்திலிருந்து விலகி உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளமை அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.