ருவன்வெலிசாய அமைதியின்மை! தேரரின் தலையில் காயங்கள் - வெளிவந்துள்ள புதிய தகவல்
அனுராதபுரம் - ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இன்று (12.11.2026) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தச் சம்பவத்தின் போது வணக்கத்திற்குரிய ராஜங்கனயே சத்ததிஸ்ஸ தேரரின் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன; அவர் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பதற்றமான சூழல்
வணக்கத்திற்குரிய ராஜங்கனயே சத்ததிஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவினர் போராட்ட இடத்திற்கு வந்ததை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் புனித பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்களை நிறுத்தவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான தேரர் குழுவினர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
போராட்ட களம்
இந்தநிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சில தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று, கஸ்ஸப்ப தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் களத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
ருவன்வெலிசாய தூபியின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இந்த அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri