மஞ்சள் காவி கஸ்ஸப்பவின் உண்மை முகம் அம்பலம்!
சமகால அரசாங்கத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பலாங்கொட கஸ்ஸப்ப தேரரின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்ய போராடுவதாக தன்னை அடையாளப்படுத்திய கஸ்ஸப்பவின் உண்மையான நோக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவாக செயற்படுவதாக பலாங்கொட கஸ்ஸப தேரர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு
கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள், திட்டமிட்ட வகையில் நீதிமன்றத்தை அவமதித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்துடன் சுமுகமான நிலைப்பாட்டை முன்னெடுத்து வரும் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கும் நேரடியாகச் சவால் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மகாநாயக்க தேரர் வாக்குறுதியை வழங்கியிருந்தால், அந்த வாக்குறுதியை காப்பாற்ற தெரிந்திருக்க வேண்டும் என பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் தமக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்சவின் பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ள மிலிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரும், தேசிய ஒற்றுமை என்ற அமைப்பும் குறித்த தேரருக்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், மிலிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஒரு முகவர் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.