கட்டுநாயக்க விமான நிலையத்தில் நள்ளிரவில் சிக்கிய இலங்கை ஆசிரியை - உடலுக்குள் மர்மம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் ஒருவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 2 கோடி 45 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் தொகுதியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய குறித்த பெண் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். அவர் தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க கட்டிகள் மீட்பு
அவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவரது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய பணப்பைகளில் 436 கிராம் நிறையுடைய நான்கு தங்க பிஸ்கட்டுகளும், மற்றுமொரு தங்க பிஸ்கட்டின் துண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்கம் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்போது தங்க பிஸ்கட் தொகுதி அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரான பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.