2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பான விவாதம்! நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (12.11.2026) சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (13) நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது.
விவாதம்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் மூன்றாவது வரவு - செலவுத் திட்டம் மீதான இந்த விவாதம், நவம்பர் 13 முதல் 20 வரை, ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 20 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து, 'குழு நிலை விவாதம்' (Committee Stage debate) அல்லது 'மூன்றாம் வாசிப்பு விவாதம்' நவம்பர் 21 அன்று தொடங்கி, நான்கு சனிக்கிழமைகள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு, டிசம்பர் 14 வரை நடைபெறும்.
இறுதி வாக்கெடுப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு, டிசம்பர் 14 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, வரவு - செலவுத் திட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் நாட்களில் (சனிக்கிழமைகள் உட்பட), நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்குக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.