ருவன்வெலிசாய அமைதியின்மை! கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அனுராதபுரம் - ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் நேற்று (12.11.2026) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்து தேதர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், வணக்கத்திற்குரிய ராஜங்கனயே சத்ததிஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவினர் போராட்ட இடத்திற்கு வந்ததை தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவு
ராஜாங்கனயே சத்தாரதன தலைமையிலான குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினர் நேற்று (12)பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவில் கஸ்ஸப தேரரை தவிர மேலும் மூன்று தேரர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களை மனநல மருத்துவப் பரிசோதனைக்கும், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.