யாழில் சொகுசு காரை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் சொகுசு காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் பயணித்த இருவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த "பென்ஸ்" ரக சொகுசு காரினை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது காரினுள் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்..
இதனை அடுத்து இருவரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை கார் மற்றும் காரினுள் மீட்கப்பட்ட பொருட்கள் என்பவற்றையும் பொலிஸார் சான்றுபொருட்களாக மன்றில் முற்படுத்திய நிலையில் அவற்றை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சொகுசு கார் இளவாலை பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவருடையது எனவும், அவரால் நாளொன்றுக்கு 08 ஆயிரம் ரூபாய் வீதம் சந்தேகநபர்களுக்கு காரினை வாடகைக்கு வழங்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
கார் தொடர்பிலும் காரின் உரிமையாளர் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரான்சை அடுத்து பற்றியெரியும் இன்னொரு ஐரோப்பிய நாடு: 14 ஆண்டுகளில் முதல் பொது வேலைநிறுத்தம் News Lankasri