இலஞ்சம் கோரிய சுங்க அதிகாரி அதிரடி கைது
சுங்கத்துறையிலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களை விடுவிப்பது தொடர்பான ஆவணங்களை வழங்குவதற்கு ஈடாக ரூபா30,000 இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுங்கத்துறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், இன்று (12) பிற்பகல் சுமார் 2.25 மணியளவில் இலங்கை சுங்கத் தலைமை அலுவலகத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களைச் சுங்கத்துறையிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான ஆவணங்களைப் புகார்தாரருக்கு வழங்குவதற்காக, ஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூபா 15,000 வீதம், ரூபா 30,000 இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam