பாடசாலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி முறைமைக்கான அறிவிப்பு
தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக பிராட்பேண்ட் இணைய வசதிக்கான வவுச்சர்கள் மூலம் 2026ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2027ஆம் ஆண்டிலும் இதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று(12.11.2026) நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
10,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
டிஜிட்டல் வர்த்தகங்கள் மற்றும் தொழில்முயற்சிகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்முயற்சி நிதியமொன்றை உருவாக்குவதற்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri