சூரிய மின்கல கட்டமைப்புகளை பயன்படுத்துவோருக்கு அரசாங்கத்தின் அதிரடி சலுகை
வீடுகளில் கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளுடன் மின்கல சேமிப்பு முறைமைகளைப் பொருத்துவோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய மின்தடைச் சம்பவங்கள்
மேலும் தெரிவித்த அவர்,
இதன்படி, ஒரு கிலோவாட் மின்கல சேமிப்புத் திறனுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். அதிகபட்சமாக 10 கிலோவாட் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு 250,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்காக 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி (PAL) நீக்கப்படும்.
அண்மையில் ஏற்பட்டதைப் போன்ற நாடளாவிய மின்தடைச் சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தேசிய மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்தவும் அதன் வலுவையும் மீள்திறனையும் அதிகரிக்கவும் அரசாங்கம் 26.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாவும் குறிப்பிட்டார்.