கடன் தவணைகளைச் செலுத்த நிதி தயார்! ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தவணைகளைச் செலுத்துவதற்குத் தேவையான பணப்புழக்கமும் நிதி ஆற்றலும் அரசாங்கத்திடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கடன்
2025ஆம் ஆண்டு அரசாங்கம் 3,707 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தியுள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் 3,591 மில்லியன் டொலரைச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, 2027ஆம் ஆண்டில் 2,986 மில்லியன் அமெரிக்க டொலரும், 2028ஆம் ஆண்டில் 3,674 மில்லியன் அமெரிக்க டொலரும் வெளிநாட்டுக் கடன் சேவைக்காகத் தேவைப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கடன் செலுத்தும் திறன் குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பினாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான வெளிநாட்டுக் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி வசதிகள் அரசாங்கத்திடம் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
ஜனாதிபதி நம்பிக்கை
பொருளாதார மீட்சிப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, வெளிநாட்டுக் கடன் பொறுப்புகளையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை இன்று முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.
மகிந்தவின் முடிவால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு 528 பில்லியன் ரூபாய் நட்டம்! அநுர வெளியிட்ட அதிரடித் தகவல்
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri