கஸ்ஸப்பவின் உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் கடும் பதற்ற நிலை! ராஜாங்கணைய தேரர் மீது தாக்குதல்
புதிய இணைப்பு
அநுராதபுர போராட்டக் களத்தில் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டுள்ளதால் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
களத்திற்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினருக்க தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், அங்கு கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் அமைத்திருந்த கூடாரங்களையும் பொதுமக்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளிச்செல்லுமாறும் பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
இதேவேளை, சற்று நேரத்திற்கு முன்பாக அங்கு எதிர்ப்பு வெளியிட வந்த ராஜாங்கணைய சத்தாரதன தேரர் மீது, கஸ்ஸப்ப தேரர் குழுவினர் கடுமையாக தாக்குதல் நடத்தி அவருடைய காவியுடை பறித்து எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கும், அங்கு சென்ற ராஜாங்கணை சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ராஜாங்கனைய தேரர் தாக்கப்பட்டு, அவருடைய காவியுடை பறித்து வீசப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவினர் அநுராதபுரத்தில் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அநுராதபுரம் புனித பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்களை நிறுத்தவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான தேரர் குழுவினர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கடுமையான பதற்ற நிலை
இந்தநிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சில தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று, கஸ்ஸப்ப தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் களத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கு சென்ற நிலையில், அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் News Lankasri