சடுதியாக அதிகரித்துள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை.. வெளியான அறிவிப்பு
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை விலையை 35 வீதம் அதிகரிப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் (LAUGFS Gas PLC) அறிவித்துள்ளது.
இன்று (13) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 4,965 ரூபாவாக இருந்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
35 வீத அதிகரிப்பு
அதேபோல, 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 1,988 ரூபாவிலிருந்து 2,720 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் திரவ பெற்றோலிய எரிவாயுவின் (LPG) விலை அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான செலவு உயர்ந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணம் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்கால விலைத் திருத்தங்களும் சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், வீட்டு மற்றும் வர்த்தக பாவனையாளர்களுக்குத் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்கத் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும், எரிவாயு கையிருப்பு மற்றும் மாவட்ட ரீதியான விலைகள் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்கள் 1345 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.