களுவாஞ்சிகுடி வைத்திய அதிகாரி பிரிவில் 08பேருக்கு சட்ட நடவடிக்கை
களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான நிலையில் சூழலை வைத்திருந்த 08பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் இன்று (13.11.2026) விசேட டெங்கு கட்டுப்பாட்டு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி தெற்கு, களுவாஞ்சிகுடி வடக்கு மற்றும் பட்டிருப்பு ஆகிய பிரதேசங்களை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டம் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
சட்டநடவடிக்கை
இதன்போது, குறித்த பகுதிகளிலுள்ள பொதுமக்களின் வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சமயஸ்தலங்கள் ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்ற குழுவினர் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இன்றைய தினம் மொத்தமாக 467 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்டமை மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 08 பேருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரினால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.







பாரிஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இஸ்ரேலியர்: நாட்டில் நுழைய அனுமதி மறுப்பு News Lankasri
சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள் Manithan