இந்திய விமான சேவைகளைப் பாதித்த மைக்ரோசொப்ட் பிரச்சினை: 3 விமானங்கள் ரத்து
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப பிரச்சினை, இந்திய விமான சேவைகளையும் பாதித்துள்ளது.
இதன்படி, ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனத்தின் டெல்லியிலிருந்து புனே, லே மற்றும் மும்பை செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி – தர்பங்கா மற்றும் டெல்லி – மும்பை ஆகிய 2 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
விமானச் சேவைகள்
ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானச் சேவைகள் வழக்கம்போல் இயங்குவதாக அறிவித்துள்ளன.
ஆகாசா ஏர் பயணிகளுக்கு விமான நிலவரங்களைத் தொடர்ந்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

விமானப் பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் தங்களது விமானப் பயண நிலவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவுட்லுக் (Outlook), மைக்ரோசொப்ட் டீம்ஸ் (Teams) உள்ளிட்ட சேவைகளில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.
பத்து நிமிடத்தில் ஐம்பதினாயிரம் டொலர்கள் வழங்க வரிசை கட்டி நின்ற மக்கள்! செந்தில் குமரனின் இசை நிகழ்ச்சிகள் மனதை உருக்கிய மனித நேயம்