ரஷ்யாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கார் குண்டுவெடிப்பு
ரஷ்யாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கார் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், உக்ரைனின் முன்னாள் ரஷ்ய ஆதரவு பிரதமர் மைகோலா அசரோவின் முன்னாள் ஆலோசகரான செர்ஜி சவொரோட்னி காயமடைந்துள்ளார்.
மொஸ்கோவில் இன்று(13.11.2026)காலை அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இடது கை இழப்பு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று(12.11.2026), செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய இராணுவ கேர்னல் ஒருவர் உயிரிழந்தார்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையிலும், இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.