உக்ரைன் – ரஷ்யா போர்: ஒரே நாளில் 3,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 26,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை உக்ரைனில் 117 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையே ரஷ்யா நிகரமாகக் கைப்பற்றியுள்ளதாக சுயாதீன மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 10, 11ஆம் திகதிகளில் அபுதாபியில் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தாக்குதல்கள்
இருப்பினும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
இரு நாடுகளும் குறைந்தது 1,000 முதல் 1,500 கைதிகளைப் பரிமாறிக்கொள்ள புதிய ஒப்பந்தம் குறித்து இணக்கம் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது, உக்ரைன் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டுக்கான ரஷ்யாவின் பாதீட்டு பற்றாக்குறை 63–67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரக்கூடும் என உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை
மேலும், ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் 3,519 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாகவும், அவற்றில் 3,068 ட்ரோன்களை இடைமறித்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ரஷ்யாவின் இராணுவ மற்றும் பொருளாதார வலிமையைக் குறைக்கும் முயற்சியில் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் போர் முடிவுக்கு வருவதற்கான உறுதியான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.