வடக்கு – கிழக்குக்கு 2027 பட்ஜெட்டில் என்ன கிடைத்தது.. ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள்!
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி 4 மணித்தியாலம் 50 நிமிடங்கள் நிகழ்த்தி, இலங்கையின் வரலாற்றில் இரண்டாவது நீண்ட பட்ஜெட் உரையைப் பதிவு செய்துள்ளார்.
வடக்கு – கிழக்கு மக்களுக்காக மீள்குடியேற்றம், வீடமைப்பு, குடிநீர், மீன்பிடி, விவசாயம், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மீள்குடியேற்றத்துக்காக மொத்தம் 10 பில்லியன் ரூபாவும், பெரிய கிளிநொச்சி குடிநீர்த் திட்டத்துக்கு 1.8 பில்லியன் ரூபாவும், வட மாகாண மீன்பிடி உட்கட்டமைப்புக்கு 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கான குடிநீர், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நாடளாவிய ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் வடக்கு – கிழக்குக்குக் கிடைக்கும் உண்மையான நிதிப் பங்கு தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன், கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட மூலதன நிதிகள் முழுமையாகச் செலவிடப்படாத நிலையில், இம்முறை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..