விடுதியொன்றில் பெண் படுகொலை! தீவிர தேடுதலில் பொலிஸாரிடம் சிக்கிய காதலன்
நுவரெலியா பொலிஸ் பிரிவின் மாகஸ்தோட்ட பகுதியில் (10) திகதி சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் (12.11.2026) நேற்று இரவு நுவரெலியா பிரதான பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபர் தேரிப்பஹா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பான விசாரணையில், அவர் 10.11.2026 அன்று தேரிப்பஹா பொலிஸ் பிரிவில் காவலில் இருந்து தப்பிச்சென்ற தேடப்படும் நபர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
இதற்கமைய, சந்தேகநபரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.



