காசா சிறுவர் நிதியத்திற்கு கல்முனையிலிருந்து நிதி கையளிப்பு
ஜனாதிபதி ரணிலின் யோசனையின் பேரில் காசா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசலினால் ரூபா 1,589,000.00 நிதி கையளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற இந்த நிதியானது நேற்று (26.04.2024) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிதி கையளிக்கும் நிகழ்வு
இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன, கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இந்நிதி சேகரிக்கும் திட்டத்திற்கு பண உதவி வழங்கிய அனைத்து தனவந்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்துடன் இந்நிதி சேகரிப்புக்கு அயராது உழைத்த ஹுதா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் தஃவா குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஹுதா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam