ஏழு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா: அமைச்சரவை இணக்கம்
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஏழு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (26) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஏழு நாடுகளுக்கு இலவச விசா
இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.
மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசா விவகாரம் குறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், விசா அறிமுகப்படுத்தப்பட்டபோது, 30 நாள் ஒற்றை நுழைவு விசா கணினியில் கிடைக்கவில்லை என்பது சிக்கல். இது நடைமுறைக்குரியது அங்கு ஒரு பிரச்சினை இருந்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இது குறித்து நிதிக்குழு அறிக்கை அளித்திருந்தால், நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம். இருப்பினும், ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தினை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
