கைம்பெண்கள் மற்றும் அநாதைகளின் நாடாக மாறி வரும் உக்ரைன்
போரின் நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், உக்ரன் உலகின் மிக மோசமான மக்கள்தொகை நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறைந்து வரும் பிறப்பு விகிதம், போரில் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான வீரர்கள், வெளிநாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் – இவை அனைத்தும் சேர்ந்து, “கைம்பெண்கள் மற்றும் அநாதைகளின் நாடு” என்ற வேதனையான நிலையை உருவாக்கியுள்ளது.
போரின் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 1 கோடி மக்கள் – உயிரிழந்தவர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்கள், ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் சிக்கியவர்கள் – என பல்வேறு காரணங்களால் இழக்கப்பட்டுள்ளனர் என உக்ரைனின் முன்னணி மக்கள்தொகை நிபுணர் எலா லிபனோவா கூறுகின்றார்.

ஏற்கனவே குறைந்து கொண்டிருந்த பிறப்பு விகிதம், தற்போது ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைக்குக் கூட கீழ் நிலைக்கு சரிந்துள்ளது.
ஐரோப்பாவின் சராசரி 1.4 ஆகவும், அமெரிக்காவில் 1.6 ஆகவும் இருக்கும் நிலையில், உக்ரைனின் நிலைமை மிகவும் கவலைக்குரியது.
போரில் பல வீரர்கள் உயிரிழந்ததால், நாட்டில் கைம்பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி, தற்போது 59,000 குழந்தைகள் தங்கள் இயற்கை பெற்றோர்களை இழந்து பராமரிப்பு குடும்பங்களில் வாழ்கின்றனர்.
2022 முதல் முழுமையான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியபின், சுமார் 60 லட்சம் மக்கள் – பெரும்பாலும் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் – வெளிநாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர்.
காலம் நீளும்போது அவர்கள் திரும்ப வருவதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது. இது உக்ரைனுக்கு மிகப்பெரிய “மூளை வெளியேற்றம்” (brain drain) பிரச்சினையாக மாறியுள்ளது.
போரில் கணவர்களை இழந்த பெண்கள் ஒன்றிணைந்து ஆதரவு குழுக்கள் அமைத்து, கைம்பெண்களுக்கான சமூக ஆதரவை ஏற்படுத்தி வருகின்றனர். “நாம் காத்திருக்க முடியாது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நம்முடைய பொறுப்பு,” என கைம்பெண்கள் வலியுறுத்துகின்றனர்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri