யாழ். கொடிகாமத்தில் விபத்து - மின்சாரம் தடை
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த இந்த விபத்து இன்று(22) இரவு 9.15 மணியளவில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் எருவன் பிள்ளையார் வளைவுப் பகுதியில் சம்பவித்துள்ளது.
மின்சாரம் தடை
மகிழுந்து ஒன்று கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த வேளையில் எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்துடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மகிழுந்து சேதத்துக்குள்ளாகியுள்ள நிலையிலும் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதால் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் வரணிப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.



மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam