கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..
மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15) இரவு சுமார் 9.50 மணியளவில், ஹுலுதாகொட வீதியில் உள்ள வீடொன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri