சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்கு (செப்டம்பர் 2023) இல் தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது.
பிணையில் செல்ல அனுமதி
இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் மற்றும் அவரது தரப்பு, இது பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலும் பல்கலைக்கழக அழைப்பின் பேரிலும் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது மனைவியின் பயணச்செலவுகள் தனிப்பட்ட ரீதியில் ஏற்கப்பட்டதாகவும் கூறி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025 ஆகஸ்ட் 22 அன்று ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.