எயார்பஸ் மோசடி விசாரணை! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் முறைகேடு தொடர்பான விசாரணைகளில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி முன்னிலையாகாத குற்றச்சாட்டின் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் பிணைப் பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 2ஆம் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிரியங்கா நியோமாலி, நீதிமன்ற விசாரணைகளுக்குத் தொடர்ந்து சமூகமளிக்காமல் தவிர்த்து வந்தமையினால், அவருக்கு எதிராக ஏற்கனவே பகிரங்க பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பகிரங்க பிடியாணை
பிரியங்கா நியோமாலி சார்பில் நீதிமன்றத்தில் பிணை நின்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர், தங்களை பிணைப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய, பிணையாளர்களை அவர்களின் பொறுப்பில் இருந்து விடுவித்த நீதிமன்றம், சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி வைப்புச் செய்திருந்த பிணைப் பணத்தை முழுமையாக அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தின் ஐவருக்கு ஏற்படப்போகும் நிலை - வெளிவந்துள்ள தகவல்
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam