இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் ராஜபக்ச
எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றைய நீதிமன்ற அமர்வின்போது சமர்ப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதற்கமைய நாமல் ராஜபக்ச இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) செப்டம்பர் 4, 2026 அன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.